நண்பனை கொலை செய்த இரண்டு பேர்… விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்…!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சோழவரம் அய்யாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் (24).மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர், கடந்த 12ஆம் தேதி இரவு நேரத்தில் வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் கடைக்கு வரவில்லை. இது குறித்து அவரது வீட்டிற்கு கடை உரிமையாளர் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
உடனே அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த சமயத்தில் கும்பகோணம் அருகே அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டு உடல் புதைக்கப்பட்டிருந்தாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அங்கிருந்த இளையரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், சோழவரம் அய்யாநல்லூர் பகுதியைச் சேர்ந்த கோகுலின் உடல் என்பது தெரிய வந்தது.
உடனே கோகுலின் நண்பர்கள் இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், நகைக்காக கோகுலை எரித்துக் கொலை செய்து புதைத்ததாகக் கூறியுள்ளனர். ,இந்த வாக்குமூலத்தின் படி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-பவானி கார்த்திக்