கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலப்பேரியைச் சேர்ந்த திருப்பதி ராஜ், ராஜகோபால் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்! – டொனால்ட் ட்ரம்ப்

தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி ஏப்ரலில் தொடக்கம்