வேலூர் பள்ளிகொண்டா சாலை அருகே இரண்டு மாணவர்கள் விபத்தில் பலி..!
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் சாலை ஓரம் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் கூலி வேலைக்கு செல்வதற்காக ரங்கசாமி வயது (வயது 55) மற்றும் ஊனைபள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தாயாளன் என்பவரின் மகன் ஆரமுதன் வயது (வயது 13) உட்பட பலரும் நின்று கொண்டிருந்தனர்.
அணைக்கட்டு அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவன், இன்று காலை தனது விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தான். நேற்று ஆடி அமாவாசை என்பதால் பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த தனியார் ஒட்டல் உரிமையாளர் குமரவேல் ( வயது 39 ) என்பவர், தனது மகன் சஞ்ஜய் (வயது 13) மற்றும் நண்பர் வெங்கடேசன் (வயது 40) உடன் மேல்மலையனூர் கோயிலுக்கு சென்று, இன்று காலை வீடு திரும்பி கொண்டிருகிறார்கள், அப்போது பள்ளிகொண்டா பகுதியை நோக்கி காரில் வந்துள்ளனர்.
அப்போது கன்னிகாபுரம் பகுதியில் சாலையோரம் சென்ற கார் சட்டேன்று பிரேக் பிடிக்காமால் சென்றுள்ளது. அந்த சமையம் அந்த சாலை வழியே நடந்து கொண்டிருந்த சிறுவன் உட்பட மேலும் இரண்டு பேர் மீது, கார் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர். விபத்து குறித்து அப்பகுதி போக்குவரத்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப் பட்டுள்ளது. தகவலின் பெயரில் அங்கு வந்த பள்ளிகொண்டா போலீசார், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று, இரண்டு பேரின் உடலையும் கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அந்த காரை ஓட்டி வந்த குமரவேல் என்பவரை பள்ளிகொண்டா காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு சிறுவர்கள் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.