நிதியை வைத்து பொளந்து கட்டிய உதயநிதி..!!
தமிழ்நாட்டில் தேர்தல் களம் எந்த அளவிற்கு சூடு பிடித்துள்ளதோ அதே அளவிற்கு அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது.
வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது பல வகையான ஐடியாக்களை கொண்டு வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். சைக்கிள் ஓட்டுவது, மாட்டு வண்டி ஓட்டுவது, வடை சுடுவது, டீ போட்டுக் கொடுப்பது, இஸ்திரி போடுவது., மடிப்பிச்சை எடுப்பது என அனைத்து வழியிலும் தங்களால் முடிந்த யுக்திகளை கையாண்டு வருகின்றனர். ஆனால் ஒருவர் மட்டும் இதுபோன்ற புதுவித செயல் செய்யாமல் பேசியே வாக்கு சேகரித்து வருகிறார்.
திமுக இளைஞரணி தலைவரும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.., அப்போது பேசிய அவர்.., மத்திய அரசு நிதிப் பகிர்வில் தமிழகம் புறக்கணிப்பதாக பலரும் கூறுகின்றனர்.
அதாவது, தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்டி வரி கட்டுகிறோம். மத்திய அரசு அந்த ஜிஎஸ்டி வரியை வாங்கி அனைவருக்கும் சமமாக தானே கொடுக்க வேண்டும்.. ஆனால் மத்திய அரசு அதை மட்டும் செய்ய மறுக்கிறது.. இதானல் பிரதமர் மோடிக்கு நான் 29 பைசா என நான் பெயர் வைத்துள்ளேன்.
தமிழ்நாட்டில் ஒரு ரூபாயை வரியாக வாங்கும் மத்திய அரசு வெரும் 29 காசுகளை நம்மிடம் திருப்பி தருகிறது. ஆனால் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு ரூபாய் ஜிஎஸ்டி கட்டினால் மூன்று ரூபாய் திருப்பி கொடுக்கின்றனர்.
மத்திய அரசு பீகார் மாநிலத்தில் ஒரு ரூபாய் கொடுத்தால் ஏழு ரூபாயை திருப்பிக் கொடுக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு அக்கறையில்லை ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் 29 பைசா வழங்குவதால் தான் நாங்கள் கேட்கிறோம்.
மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலின் அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி தருவதாக சொன்னார்கள்., ஆனால் அதை கட்டும் முயற்சியில் ஈடுபடவேயில்லை வெறும் அடிக்கல் மட்டுமே நாட்டினார்கள்.
அடிக்கல் நாட்டியதோட சரி அதற்கு பின் கட்டுமானம் எழுப்பப்படவில்லை இதனால் ஒரு செங்கலை வைத்து நாங்கள் கேள்வி கேட்டாலாவது எய்ம்ஸ் கட்டப்படுமா என பார்த்தோம் ஆனால் கட்டப்படவில்லை..
ஆனால் மக்கள் மத்தியில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.., அதன் அடிப்படையில் தான் தற்போது ஜீஎஸ்டியின் 29 பைசாவும்.., ஆனால் இதுவும் பாஜகவால் மாறப்போவதில்லை என எனக்கு தெரியும்.., ஆனால் மக்களாகிய நீங்கள் நினைத்தால் அதை மாற்றலாம்.
வருகின்ற 19ம் தேதி நம் உதய சூரியனுக்கு வாக்களித்து கனிமொழியை வெற்றி பெற செய்தால்., பல மாற்றங்கள் நாம் செய்யலாம் செய்வீர்களா என கேட்டார். அதன் பின் மக்கள் அவருக்கு வீர வாழ் கொடுத்தனர் அதனை அன்பளிப்போடு பெற்று பிரச்சாரத்தை முடித்து கொண்டார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..