யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைப்பு..!! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!!
தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுகள் ஜனவரி 3-ம் தேதி முதல் ஜனவரி 16-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
உலகெங்கும் உள்ள தமிழர்கள், இன்று பொங்கல் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் திருநாளில் யுஜிசி நெட் தேர்வுகள் நடத்தப்படும் என தேசிய முகமை அறிவித்திருந்தது. தற்போது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழகத்தில் பொங்கல் திருநாளும்,
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடப்படுவதாலும் தேர்வுக்கான தேதியை மாற்றக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன் விளைவாக, 15 தேதி நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான மாற்று தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றிட வேண்டும் என்று ஒன்றியக் கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். தற்போது அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது சரியான முடிவு என்றும்
தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
இனியாவது நாட்டில் செயல்படும் எந்தவொரு அமைப்பும், நமது நாட்டின் பன்முகத்தன்மையையும் – இங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பார்கள் என நம்புவோம் என இவ்வாறே குறிப்பிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..