வயதாவதால் உண்டாகும் சரும பிரச்சனைகள்..!
வயதாவதினால் உண்டாகும் சரும பிரச்சனைகள்:
கொலாஜன் மற்றும் எலாஸ்டிக் குறைவதினால் சருமத்தில் சுருக்கங்கள் உண்டாகும். உதாரணமாக கழுத்து, முகம், கைகள் போன்ற பகுதிகள் சுருக்கங்கள் அதிகமாக தெரியும்.
சூரிய ஒளி, மரபணு காரணிகள், வயது ஆகியவற்றால் சருமத்தில் கருப்பான புள்ளிகள் தோன்றும். வயது ஆவதினால் சருமமானது ஈரப்பதத்தை தக்க வைக்கும் சக்தியை இழக்கிறது. இதனால் சருமம் வறண்டு சருமத்தில் அரிப்பை ஏற்ப்படுத்துகிறது.
சூரிய ஒளியில் இருந்து வரும் புறஊதாக் கதிர்கள் சருமத்தை பாதித்து சரும புற்றுநோய் உண்டாகவும் காரணமாக இருக்கிறது.
சிலருக்கு சருமம் ரொம்ப தளர்ந்து இறுக்கம் இழந்து, வறட்சி அதிகமாகி சொரியாஸிஸ் ஆகிய பிரச்சனைகளை கூட ஏற்ப்படுத்தும்.
வயதாவதினால் ஏற்ப்படும் சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க:
வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது கட்டாயம் சன் ஸ்கிரீன் பயன்படுத்தி கொண்டு வெளியே செல்ல வேண்டும். இது புறஊதாக்கதிரில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.
வறண்ட சருமத்திற்கு அன்றாடம் மாய்ஸ்ரைசர் பய்ன்படுத்தி ஈரப்பதத்தை தர வேண்டும்.
பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்சத்து கொண்ட உணவு பொருட்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.
தினமும் போதுமான அளவு தூங்குவது மிகவும் அவசியம்.
சருமத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்ப்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
வயதாவதினால் உண்டாகும் சரும பிரச்சனைகளை தடுக்க முடியாவிட்டாலும் அதனை பாதுகாக்க முடியும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை பின்பற்ற வேண்டும்.