விஜயலட்சுமி சீமான் திருமண மோசடி வழக்கில் எதிர்பாராத ட்விஸ்ட்..!!
விஜயலட்சுமி திருமண மோசடி புகார் வழக்கை திரும்பப் பெற்றதால் என் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென சீமான் மனு அளித்துள்ளார்.
சீமான் மீது புகார் அளித்திருந்த நடிகை விஜயலட்சுமி இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்ய இருந்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இன்று நீதிமன்றத்திற்கு வரமுடியாமல் போனதால் சீமான் விஜயலட்சுமி திருமண வழக்கு அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், தன் மீதான வழக்குகளை விஜயலட்சுமி ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்..
முழு விவரம் :
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்..
இந்த புகாரின் பேரில் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள், நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை செய்தார். பின்னர் திருவள்ளூரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமிக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு சம்மன் அனுப்பினர். இதனை தொடர்ந்து 12-ம் தேதி ஆஜராவார் என்று சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது..
இந்த நிலையில் இன்று வளசரவாக்கம் காவல் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அந்தப் பகுதியில் குவிந்தனர். இதையடுத்து காவல் நிலையம் அமைந்துள்ள ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
இந்தச் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் சீமான் இன்று காவல் நிலையத்திற்கு நேரில் வந்து ஆஜராகவில்லை அதற்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆறு பேர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
பின்னர் வழக்கறிஞர் சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
சில பல காரணங்கள் காரணமாக எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் ஆஜராக முடியவில்லை. இது தொடர்பாக சீமான் கொடுத்த 2 விளக்க கடிதம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து உள்ளோம், நடிகை விஜயலட்சுமி 2011ல் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக சமாதானமாக செல்வதாக கூறியதையடுத்து இந்த வழக்கு ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்றத்தில் ஒப்புதல் ஏதேனும் பெறபட்டுள்ளதா என்றும் கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். இது தொடர்பாக ஆலோசித்து விளக்கம் அளிப்பதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறை விளக்கம் கிடைத்தபின் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க சீமான் தயாரக உள்ளார், இவ்வாறு அவர் கூறினார்.
விஜயலட்சுமி திருமண மோசடி புகார் வழக்கை திரும்பப் பெற்றதால் என் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென சீமான் மனு அளித்துள்ளார்.
சீமான் மீது புகார் அளித்திருந்த நடிகை விஜயலட்சுமி இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்ய இருந்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இன்று நீதிமன்றத்திற்கு வரமுடியாமல் போனதால் சீமான் விஜயலட்சுமி திருமண வழக்கு அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், தன் மீதான வழக்குகளை விஜயலட்சுமி ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..