புரியாத புதிர்.. பெண் வடிவில் நதியா..? குட்டி ஸ்டோரி-31
அழகான பெண் ஒருத்தி நதிக்கரையில் அமர்ந்து கொண்டு அமைதியே வேண்டி அமர்ந்திருந்தால், அந்த வழியாக வந்த வேட்டையன் இந்த பெண்ணை பார்த்தான், அவள் அழகை பார்த்து மயங்கி, மெய்மறந்து நின்று கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அந்த பெண் அவளது வீட்டிற்கு புறப்பட்டாள்.
இவனும் வேட்டையாடி விட்டு கிளம்பினான், இரவு பொழுதும் ஆகிவிட்டது அவன் உறங்குவதற்காக புறப்பட்டான், அனால், அவன் தூக்கம் வராமல் தவித்து கொண்டிருந்தான், அதன் காரணம் என்ன வென்றால் அந்த நதிக்கரையில் இருந்த பெண் அவன் மனம் முழுவதும் அவளின் நினைப்பில் இரவு முழுவதும் உறங்காமல் விடிவை நோக்கி காத்திருந்தான்.
விடிந்ததும் அவளை காணவேண்டும் என்று ஆர்வமுடன் கிளம்பினான், ஆனால் அந்த பெண் அன்று நதிக்கரைக்கு வரவில்லை அவனும் மாலைநேரம் முழுவதும் காத்திருந்து விட்டு வீடு திரும்பினான்.
ஆனால் அவன் மனம் அமைதி கொள்ளாமல் தவித்து கொண்டிருக்க மறுநாளும் ஆனது இன்றைக்காது வருவாளா என ஏக்கத்துடன் நதிக்கரைக்கு சென்று பார்த்தான். அவன் அங்கு சென்று பார்த்தான் அவன் மனம்முழுவதும் அளவிற்கு அதிகமான சந்தோசம் அந்த பெண்ணை பார்த்துவிட்டான் என்பதால் அன்றைய பொழுதும் முடிந்தது.
தினமும் இதுமாதிரியே நடந்து கொண்டருந்தது நாலும் கிழமையும் போய்க்கொண்டு இருந்தது அவளிடம் பேசுவதற்க சென்றான் வேட்டையன், அவளை பக்கத்தில் பார்த்ததும் மயங்கி விழுந்துவிட்டான்.
அந்த பெண் அவனை தண்ணி தெளித்து எழுப்பினால், அவன் முழித்து பார்த்தான் யாரு நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள் என்று அந்த பெண் கேட்டால் நான் வேட்டையன், இங்கு வேட்டையாட வரும்போது உங்களை பார்த்தால் அன்றிலிருந்து உங்களை நினைத்து கொண்டறிகிறேன் என்று கூறினான்.
அந்த பெண் அதை கேட்டு சிரித்தாள், அவனுக்கு ஒன்னும் புரியவில்லை எதற்காக சிரிக்கிறீர்கள் என்று கேட்டான் நான் இந்த நதி கரையிலே இருப்பவள் நான் பெண் இல்லை என கூறி மறைந்து விட்டால். அவனுக்கு அப்பொழுதான் புரிகிறது அது பெண் வடிவில் இருந்த நதி என்று .
இதிலிருந்து என்ன புரிகிறது எதையும் முழுதாக புரிந்து கொள்ளாமல் பின்னாடி செல்வது ஏமாற்றத்தை தரும்.
–சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..