மறக்க முடியாத முதல் காதல்..!! அருகினில் யாரோ போல் வாழும் அழகி..!!
ஒருவன் தன் காதலியே இவ்வளவு அழகா வர்ணிக்க முடியும் என்று நமக்கு சொல்லிகுடுத்த பாடல் இது . ஒளியில் தெரியும் காதலியை தேவதையாக நினைத்து பாடும் காதலனின் மனதில் ஒலித்தது தான் இந்த வரிகள்
“ஒளியிலே தெரிவது தேவதையா.. உயிரிலே கலந்தது நீ இல்லையா,
இது நேசமா நெசம் இல்லையா.., உன் நெனவுக்கு தெரியலையா..
அவளுடைய மனதிற்குள் என்ன நடப்பது என்று புரியவில்லை, என்ன நடக்க போகிறது என்றும் புரியவில்லை என நினைக்க வைத்த வரிகள் தான் இது.
சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே நடப்பது என்னென்ன
என்ன எண்ணியும் புரியவில்லையே நடந்தது து என்னென்ன…
அவன் மனதிலும் கேள்வி எழுந்த போது.., ஒலித்த வரிகள் தான் இது. ஆனால் இந்த வரிகளில் உள்ள மாயம் இருவரின் மனதிலும் கேட்டுக்கொண்டே இருக்கும்.
கோவில் மணியை யாரு அடிக்குறா…,
தூங்க விளக்க யாரு ஏத்துறா..
அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது..
தனிமையிலேயே தன் முதல் காதலை நினைத்து ஒழிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஒலிக்கும் பாடல் இவை தானோ..
இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்,
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யார் அறிவார்…
சரி காதலியை மனதில் தேவதையாக நினைத்தவன் அவனுக்கு சொந்தாமானால். எப்படி பார்த்து கொள்ளுவான் என நினைத்தால் விதியால் இருவரும் பிரிந்து விடுவார்கள். அப்படி பிரிந்த அந்த காதல் பல வருடங்கள் கழித்து தன் முன்னாள் காதலியை பார்த்தவுடன் கேட்கின்ற பாடல் இவை தானோ.
உன் குத்தமா..? என் குத்தமா..?
யார நானும் குத்தம் சொல்ல..?
தேவதையாக இருந்த காதலி.., நடைபாதையில் வாழ்ந்தால் மனமும் உருக தானே செய்யும்.
பச்சம்பசு சோலையிலே.., பாடி வந்த பைங்கிளியே.
இன்று நடபாதையிலே.., வாழவதென்ன மூலையிலே..?
கொத்து நெருஞ்சு முள்ளு.., குத்துது நெஞ்சுக்குள்ளே ,
சொன்னாலும் சோகம் அம்மா.., தீராத தாகம் அம்மா.
தனலட்சுமியை சண்முகம் இந்த அளவிற்கு காதலித்து அந்த காதலை மனதினுள் வைத்துக்கொண்டு அவளை அருகில் யாரோ போல் வைத்து கொண்டு வாழ்வான். ஒரு நாள் அந்த காதலில் பிறந்து செல்ல அவளின் நினைவுகளை சுமந்து கொண்டு செல்லும் கதையே. இது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..