துரித உணவு அபாயத்தை எச்சரிக்கும் யுனிசெஃப்…!

மாறிவரும் உணவுப்பழக்க வழக்கங்கள் நம் குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை இந்நிலையில் தற்கால உணவு பழக்க வழக்கத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்பதுகுறித்தான ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பு, உலக சுகாதார நிறுவனம் போன்ற அமைப்புகள் இணைந்து, குழந்தை ஆரோக்கியம் தொடர்பான வல்லுநர் குழு ஒன்றை உருவாக்கியது. அந்த வல்லுநர் குழு, நம் குழந்தைகளின் உணவு பழக்க வழக்கத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்பதை யுனிசெஃப் தனது அறிக்கையில் வெளியிட்டுஉள்ளது

உலகளவில் குழந்தைகள் துரித உணவுப் பண்டங்கள் தொடர்பாக, ஓராண்டுக்குக் குறைந்தபட்சம் 30,000 விளம்பரங்களைத் தொலைக்காட்சி வாயிலாகப் பார்க்கிறார்கள். குழந்தைகளைக் குறிவைத்தே சமூக வலைதளங்கள் மற்றும் இதர பல இணையதளங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துகின்ற நிறுவனங்களால் ஏற்படுகின்ற பாதிப்புகள் மிகப் பெரியது என யுனிசெஃப் வல்லுநர் குழு எச்சரித்துள்ளது.இந்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த யுனிசெஃப் வல்லுநர் குழு, உலக நாடுகளை இந்தப் பிரச்னை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது

துரித உணவு அபாயத்தை எச்சரிக்கும் யுனிசெஃப்…!

உலகம் முழுவதும் உள்ள மக்களின் குறிப்பாக நமது மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்து மேலை நாடுகளின் ஃ பன்னாட்டு துரித உணவுக் நிறுவனங்கள் துரித உணவு வகைகளை அறிமுகப்படுத்தி நம் மக்களை அடிமைகளாக மாற்றி வருகின்றன.இதன்மூலம் ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்தி செய்யப்பட்ட தனிச்சுவையுடன் கூடிய உணவுவகைகள் அழிக்கப்பட்டு ஒரே மாதிரியான உணவு வகைகள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன.

இந்த துரித உணவுகளில் சுவைதான் அதிகமாக இருக்குமே தவிர உடல் நலத்திற்குத் தேவையான சத்துக்கள் இருப்பதில்லை. இவற்றில் சேர்க்கப்படும் இரசாயனப் பொருள்களினால் உடல் நலத்திற்கு தீமையே விளையும்.மேலும் துரித உணவுகளில் சேர்க்கப்படும் சாயம் அஜினோமோட்டோ போன்ற வேதிப் பொருட்கள் நமது குடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். துரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும் நீரரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதில் அலட்சியம் காட்டினால் உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்

துரித உணவு அபாயத்தை எச்சரிக்கும் யுனிசெஃப்…!

ஞாபக சக்தி குறைவு, கவனக்குறைவு, திட்டமிட்டு செயற்படும் திறன் குறைவு எனப் பல பிரச்சினைகள் ஏற்படும், தலைவலி, மனச்சோர்வு, உடற்சோர்வு, உடல் எடை அதிகரிப்பு உணவுக்கு ஏங்குதல் போன்ற வியாதிகளும் உண்டாகும், விபரீதங்கள், உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாமை, வயிற்றுவலி,மூட்டுவலி நாக்கு வீங்குதல் ஏற்படுவதுடன் நரம்பு செல்களும் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும், இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சிறுவயதிலேயே பருவமடைகின்றனர்

இதற்குப் பல காரணங்கள் உண்டு. எனினும் நம்முடைய உணவுப் பழக்கத்திற்கு அதில் முக்கிய இடம் உண்டு.பெண்கள் பருவமடைவதற்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் எனும் ஹோர்மோனை அதிகம் சுரக்கச் செய்வதில் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளுக்கு முக்கிய இடம் உண்டு.

What do you think?

மாநிலம் தழுவிய PUBG போட்டி; அதிர வைத்த மோசடி?

காங்கிரஸுக்கு மாஸ்டர் ஆகிறாரா விஜய்?