மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி…!! துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு..!!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது., குறிப்பாக சென்னைக்கு ரெட் அலார்ட் விடப்பட்டிருந்தது.. கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் அதனை துரிதமாக அஅப்புறபடுத்தி சென்னை மாநகராட்சி செயல்பட்டது..
அதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் தமிழக வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை சார்பிலான அதிகாரிகளுடன் உயர்நிலை ஆய்வுக்கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது…
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை சார்பிலான உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை மூன்றாம் கட்டமாக தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தினோம்.
தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான இலக்குகளை நோக்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை பற்றி இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசித்தோம்.
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளர்ச்சியை எட்டுவதற்கான திட்டங்கள், சிறப்பு மற்றும் புதுமையான திட்டங்களை பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்ற வழிமுறைகள் – எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள முயற்சிகள் உள்ளிட்டவைக் குறித்து இந்த ஆய்வுக்கூட்டத்தின் போது அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம்..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை சார்பிலான உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை மூன்றாம் கட்டமாக தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தினோம்.
தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான இலக்குகளை நோக்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை பற்றி இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசித்தோம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..