அலட்சியம் காட்டும் ஒன்றிய அரசு..! ஆவேசமான துரைவைகோ..!
பாஜக கூட்டணிக்கு ஒரு இடத்தைக் கூட தமிழ்நாடு வழங்காததால் தான் ஒன்றிய அரசு இவ்வளவு அலட்சியப் போக்கை காட்டுகிறதா..? என்று மக்களவை எம்.பி. துரை வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் துரை வைகோ பேசியதாவது., கோவிட் 19 லாக்டவுன் முன்பு வரை மூத்த குடிமக்கள் மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற பத்திரிகை ஊடகங்களுக்கு ரயில் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை வழங்கப்பட்டது. ஆனால், கோவிட் 19 லாக்டவுன் அறிவித்தபிறகு அந்தக் கட்டண சலுகை நிறுத்தப்பட்டது.
தற்போது வரை மூத்த குடிமக்கள் மற்றும் ஊடகத்துறையினர் பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டன சலுகை திரும்பி வழங்கப்படவில்லை. எனவே, அரசு அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 50% பயணச்சீட்டு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். மேலும், 2020 மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு மாணவர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட சலுகையுடனான மாதாந்திர சீட்டுகளையும் மீண்டும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என மக்களவையில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று உரை ஆற்றிய துரை வைகோ , தமிழக மக்கள் பாஜக கூட்டணிக்கு ஒரு இடத்தைக் கூட வழங்காததால்தான் தமிழகத்தின் மீது இவ்வளவு அலட்சியப்போக்கை ஒன்றிய அரசு காட்டுகிறதா..? என துரைவைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணிக்கு வாக்களிக்கத் தவறியதால் ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு எந்த உதவியும் கொடுக்கவில்லை என பாஜக கூட்டணி கட்சிகளில் ஒன்றான பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரே தனது வாயால் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அவர் சொன்ன அந்த வார்த்தையை தான்.., இப்போது நான் கேள்வியாக முன்வைக்கிறேன் என துரைவைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள தங்களது மக்களின் நலன்களுக்கு பாதகம் விளைவிக்கக் கூடாது என்றும், நிதி அல்லது திட்டங்களின் அடிப்படையில் தமிழகத்திற்கு நியாயமான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் ஒன்றிய அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாகவும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..