ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்…!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!!
தமிழ்நாட்டு மக்களை நாகரிகமற்றவர்கள் என்று பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு மக்களவை கூடிய நிலையில், புதிய கல்விக்கொள்கையை பின்பற்றாததால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி மறுக்கப்படுவதாக திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றி கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவது என தவறாக பரப்புரை செய்யப்படுவதாக தெரிவித்தார்.
இவரின் பதிலை ஏற்க மறுத்து திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம் எழுப்பினர். இதனால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பி.க்கள் ஒருபோதும் கூறியது இல்லை என்றும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதில், ஒன்றி கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மக்களை நாகரிகமற்றவர்கள் என பேசியுள்ளார். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர்
தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்.
தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து
அநாகரிகமானவர்கள் என்பதா..?
தமிழ்நாட்டு மக்களை அவமான படுத்துகிறீர்கள் பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா..?
NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?
பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல..!!
நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்..!
தமிழ்நாட்டின் நிதியைத் தராததை சுட்டிக்காட்டி, மக்களை ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஒன்றிய அரசின் திட்டத்தைச் செயல்படுத்த தமிழகம் முன்வரவில்லை என்றும், அப்படி முன்வராத தன்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது என காட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை மன்னர் என எண்ணிக் கொண்டு, ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சருக்கு நாவடக்கம் வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..