கொரோனா குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்?

கொரோனாவால் 2 கோடியே 50 லட்சம் மக்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் மட்டுமின்றி லட்சக்கணக்கான கோடி பொருளாதாரமும் சரிவடைந்துள்ளது. அனைத்து தொழில்களும் உலகம் முழுவதும் முடங்கியுள்ளதால் சுமார் 2.5 கோடி மக்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக ஐ.நா மதிப்பீடு செய்துள்ளது.

இதனால் 3 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமான இழப்பு நேரிடும் எனவும் ஐ.நா அறிவித்துள்ளது. ஆனாலும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்ய சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உருவாக்கும் கொள்கை முடிவின் மூலம், இந்த மதிப்பீட்டு எண்ணிக்கையை விரைவில் குறைக்கலாம் என்றும் ஐ.நா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

What do you think?

-1 points
Upvote Downvote

திருப்பதி கோவில் மூடப்பட்டது!

கொரோனா – மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் டிப்ஸ்!