உ.பி மருத்துவமனை தீ விபத்து…!! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…!!
உத்தர பிரதேசம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீ விபத்தில் உயிர் இழந்த குழந்தைகளுக்கு நிவாரண தொகையும், விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஜான்சி வட்டாட்சியர் மற்றும் டிஐஜிக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்..
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள லட்சுமிபாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். விபத்தில் உயிர் இழந்துள்ள குழந்தைகள் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரிவுபதி முர்மு, மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்துள்ள 16 குழந்தைகளை வேறு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் 54 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஜான்சி மாவட்ட ஆட்சியர் அவினாஷ் குமார் செய்தியாளர்களிடம், “இந்த விபத்தில் அவசர சிகிச்சைப்பிரிவின் வெளிப்பகுதியில் இருந்த குழந்தைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது., அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் கூறினார்.
மேலும் இந்த விபத்தில் உயிர் இழந்துள்ள குழந்தைகளுக்கு பிரதமர் மோடி, தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு .2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல் அம்மாநில முதல்வர் முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி 12 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஜான்சி வட்டாட்சியருக்கும், டிஐஜிக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..