தமிழகத்தில் வரவுள்ள திட்டங்கள்..! அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி..!!
78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் பெரியகருப்பன் துவங்கி வைத்தார்..
அதைத் தொடர்ந்து பொதுமக்களுடன் அமர்ந்து அமைச்சர் உணவு உட்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன் ….
சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவர்ணக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் பெருமக்கள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு கோவில்களில் அன்னதான நிகழ்வு துவங்கி வைத்துள்ளோம்.. அதில் ஒரு தொடர்ச்சியாக தற்போது காளிகாம்பாள் கோவில் அன்னதான நிகழ்ச்சி துவக்கி வைத்துள்ளேன் என அவர் கூறினார்.
அதை தொடர்ந்து பேசிய அவர் முதலமைச்சர் ஸ்டாலின் மிக சிறந்த திட்டங்களை தீட்டு வருகிறார்.. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டம் பற்றியும் அதன் அவசியம் குறித்தும் இன்று பேசியுள்ளார்..
அதன் ஒரு தொடர்ச்சியாக தான் முதல்வர் மருந்தகம் மருத்துவத் திட்டத்தினை துவங்கி வைத்துள்ளார்.. இது ஏழை மக்களுக்கு பெரிதும் பயன்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய அவர் கூட்டுறவுத் துறை செயலியில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் விரைவில் சரி செய்யப்பட்டு அதற்கான புதிய தொழில்நுட்பம் பயன் படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..