‘போஸ் வெங்கட் இயக்கத்தில் கதாநாயகனாகும் உறியடி புகழ் விஜயகுமார்’

போஸ் வெங்கட் இயக்கத்தில் உறியடி படப்புகழ் விஜயகுமார் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மெட்டி ஒலி சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் போஸ் வெங்கட். சீரியல் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இதுவரை நடிகராக இருந்த போஸ் வெங்கட் கடந்த சில நாட்களாக முன்பு வெளியான கன்னி மாடம் படம் மூலம் இயக்குனராகவும் மாறினார்.

ஆணவக்கொலையை மையமாக வைத்து வெளியான இந்த கன்னி மாடம் திரைப்படம் அவருக்கு ஒரு நல்லபெயரை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் அவர் அடுத்ததாக உறியடி படத்தின் இயக்குனர் விஜய்குமாரை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

தண்ணீரின் தேவையை உணர்த்தும் விதமாக நீருக்கும்-ஊருக்கும் உள்ள தொடர்புகளை மையப்படுத்தி நகைச்சுவை கலந்த சமுதாய கருத்துள்ள படமாக இந்தத் திரைப்படம் உருவாகவுள்ளது. ‘மூவ் ஆன் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தில் நடிகர் பசுபதி கதாநாயகன் விஜயகுமாரின் அப்பாவாக ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சாதிய கொடுமைகளுக்கு எதிராக படம் எடுத்த போஸ் வெங்கட் மற்றும் விஜயகுமார் இருவரும் தற்போது ஒரே படத்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

What do you think?

‘திரையரங்குகள், வணிக வளாகங்களை மூடுங்கள்’ முதலமைச்சர் உத்தரவு!

சென்னையில் கொரோனா விழிப்புணர்விற்க்காக இலவசமாக வழங்கப்பட்ட 500 கிலோ சிக்கன் பக்கோடா!