Madhimugam
Exclusive Today Trending அரசியல் இந்தியா உலகம்

இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ராம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ராம்ப் வரும் 24-ந் தேதி இந்தியா வர இருப்பதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ராம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவரும் வரும் 24, 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா – இந்தியா நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்காக இந்த பயணம் அமையும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம் ட்ராம்ப், இந்திய பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் டெல்லி, குஜராத் ஆகிய நகரங்களுக்கு தலைவர்கள் இருவரும் செல்ல உள்ளனர். நாட்டு விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தி, பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்ற வகையில் இவர்களது பயணத்தில் குஜராத் இடம்பெற்றுள்ளது. இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த செப்டம்பரில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு சென்ற பிரதமர் மோடியை வரவேற்ற டிரம்ப் விருந்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எம்.பி., நவாஸ்கனி ஆறுதல்

Digital Team

ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் தயார் பிரதமர் மோடி

Digital Team

இடஒதுக்கீடு தொடர்பாக நாடுதழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு..!

Digital Team

ரசிகர்களுடன் கெத்து காட்டிய விஜய் – சம்மன் அனுப்பிய வருமானவரித் துறை

Digital Team

12,000 கோடி கிடையாது, வெறும் 10,000 ரூபாய்தான் – தமிழக ரயில்வேக்கு அதிர்ச்சியளித்த மத்திய அரசு

Digital Team

இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு! : இலங்கை அமைச்சர் வலியுறுத்தல்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam