காஷ்மீர் குறித்து அமெரிக்கா கவலைப்பட வேண்டாம் – ஜெய்சங்கர்

ஜம்மு-காஷ்மீர் விவகார்ம் தொடர்பாக அமெரிக்கா கவலைப்பட வேண்டாம் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சா்வதேச நாடுகளில் நிலவி வரும் பாதுகாப்பு சூழல் குறித்து விவாதிப்பதற்காக ஜொ்மனியின் மியூனிக் நகரில் ‘பாதுகாப்பு மாநாடு’ கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றுள்ளார்.

இந்த மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சோ்ந்த எம்.பி. லின்ட்ஸே கிரகாம் கூறுகையில், ‘‘அமெரிக்காவைப் போல இந்தியாவும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அந்தப் பிரச்சினைகளுக்கு ஜனநாயக ரீதியில் இந்தியா தீா்வு கண்டு வருகிறது. ஆனால், ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் இந்தியா எவ்வாறு தீா்வு காணப்போகிறது என்று தெரியவில்லை. ஏனெனில் ஒரு பிரச்சினைக்கு இரு ஜனநாயக நாடுகள் வெவ்வேறு தீா்வுகளைக் காண வாய்ப்புள்ளது’’ என கருத்து தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த எஸ்.ஜெய்சங்கா், ‘‘இந்த விவகாரம் தொடா்பாக நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்தியா இந்த விவகாரத்துக்கு உரிய தீா்வு காணும்’’ என்றார். இதைத் தொடா்ந்து பேசிய ஜெய்சங்கா், ‘‘ஐக்கிய நாடுகள் சபை அதன் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. ஐ.நா. சபை கூட்டங்களில் பன்முகத்தன்மை வலுவிழந்து வருகிறது. கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வரும் ஐ.நா. சபை, இன்னும் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஐ.நா. சபையின் கட்டமைப்பில் சீா்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது’’ என தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்ப் முதன் முறையாக வரும் 24-ஆம் தேதி இந்தியா வரவுள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

“அனைவருக்காகவும் உழைப்பேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

மண்ணை விட்டுச்சென்ற தொண்டனால் கதறி அழுத வைகோ!