மோடியிடம் வருத்தம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வியட்நாம் தலைநகரில் ஹனோயில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:
“ஜி 20 உச்சி மாநாட்டை நடத்திய இந்திய பிரதமர் மோடியின் தலைமை மற்றும் விருந்தோம்பலுக்காக நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி வெள்ளை மாளிகை வந்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம்.
எப்போதும் போல, மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், வளமான இந்தியாவை கட்டியெழுப்புவதில் பொதுமக்கள் மற்றும் சுதந்திரமான ஊடகங்களுக்கு உள்ள முக்கிய பங்கை நான் மோடியிடம் எடுத்துக் கூறினேன். சில மாதங்களாக நடந்துக் கொண்டிருக்கும் வன்முறைகளுக்காக எனது வருத்ததையும் பதிவு செய்தேன் இவ்வாறு பைடன் கூறினார்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நீடித்த முன்னேற்றத்தில் முதலீடு செய்தல், காலநிலை மாற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளுதல், உணவு பாதுகாப்பினை வலுப்படுத்துதல், கல்வி மற்றும் உலகளாவிய சுகாதரம் மற்றும் சுகாதார பாதுக்காப்பு ஆகியவைகளில் கவனம் செலுத்துவது. எங்களுடைய பகிரப்பட்ட எதிர்காலத்துக்கான நேர்மையான பார்வையுடன் அமெரிக்கா ஒரு பங்குதாரராக இருப்பதை உலகுக்கு நாங்கள் காட்டியுள்ளோம்” என்று தெரிவித்தார்.