முகம் எப்போதும் Dry ஆகாமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க…!!
சூரிய கதிர்வீச்சுக்கள் நேரடியாக சருமத்தில் படுவதால், சருமம் பொலிவிழந்து விரைவில் கருத்து விடும். சில சமயங்களில் அதிலும் மழைகாலங்களில் வெதுவெதுப்பான நீரை நேரடியாக முகத்தில் உபயோகிப்பதாலும் சருமம் விரைவில் Dry ஆகி விடுகிறது..
அதை மறைபதற்காக நாம் பயன்படுத்தும் அழகு பொருட்கள் மேலும் நம் சருமத்தை சிதைத்து விடுகிறது.. அப்படியாக முகம் கருக்காமலும் சுருங்காமல் இருப்பதற்கான சில டிப்ஸ் பற்றி இங்கே பார்க்கலாம்.
* டிராகன் பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, முகத்தில் பயன் படுத்த வேண்டும். இதனால் முகப்பரு குறைந்து விடும். சன் டான் சரியாகி சருமத்தில் நீரேற்றைத்தை அதிகரிக்கச் செய்துவிடும்.
* டிராக்கன் பழம் மற்றும் தயிர் எடுத்துக்கொள்ளவும்.
* டிராகன் பழத்தை பாதியாக வெட்டி அதன் தோல் மற்றும் விதைகளை நீக்கி விட வேண்டும். பின் அதை ஒரு பவுலில் மாற்றி தயிர் சேர்க்க வேண்டும்.
* இரண்டையம் ஒன்றாக சேர்த்து அரைத்து பேஸ்ட் போல எடுத்துக்கொள்ள வேண்டும்.
* முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்யவேண்டும்.
* முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து முகம் கழுவி, மென்மையான துணியால் துடைக்க வேண்டும்.
* வாரத்திற்கு ஒருமுறை இதை செய்து வந்தால் கருக்காது, முகம் சுருக்கம் அடையாது, என்றும் இளமை தோற்றத்துடன் இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..