சருமத்தில் செய்யக்கூடாத தவறுகள்..!
சருமத்தை பராமரிக்கும்போது அது ஒருசில தவறுகளை உண்டாக்கும். அதனால் சரும பிரச்சனைகள் உண்டாக்கும். சருமத்தில் செய்யக்கூடாத சில தவறுகளை பற்றி பார்க்கலாம்.
தவறான கிளென்சர் பயன்படுத்துவது:
முகத்தை சுத்தம் செய்வது என்பது மிகவும் முக்கியம் ஆனால் அதற்காக தவறான கிளென்சரை பயன்படுத்துவதாலும் சருமத்தில் எண்ணெய் பசை அதிகரித்து பருக்கள் உருவாக வாய்ப்பு அதிகம். எனவே உங்களின் சருமத்திற்கு ஏற்ற கிளென்சரை தேர்வு செய்து பயன்படுத்துவது சிறந்தது.
சன்ஸ்கிரீன் பயன்படுத்தாதது:
சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் சருமத்தை கருமையாக்கி வயதான தோற்றம் உண்டாகும். இது சருமத்தில் புற்றுநோய்க்கு கூட வழிவகுக்கும். எனவே குறைந்தது எஸ்பிஎப் 30 உள்ள சன்ஸ்கிரீன் பயன்படுத்தியப்பின் வெளியில் செல்வது நல்லது.
அடிக்கடி ஸ்கரப் செய்வது:
முகத்தில் ஸ்கரப் செய்வதினால் இறந்த செல்கள் நீங்கி சருமத்தை மென்மையாக்கும். முகத்தில் அடிக்கடி ஸ்கரப் செய்வதினால் சருமம் எரிச்சலடைய வாய்ப்பு உள்ளது, எனவே வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே ஸ்கரப் செய்தல் நல்லது.
முகத்தை அடிக்கடி தேய்த்து கழுவுவது:
முகத்தை அடிக்கடி தேய்த்து கழுவுவதால் சருமத்தில் எரிச்சல் உண்டாகும். இது சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் பசையை நீக்கி சருமத்தை மோசமாக்கும். எனவே சருமத்தை கழுவும்போது அதிக அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
சரியான தூக்கமின்மை:
சரியான தூக்கம் இல்லாதது சருமத்தில் பலவித பிரச்சனைகளை உண்டாக்கும். தூக்கம் இல்லாததால் கண்களை சுற்றி கருவளையம், முகத்தை மந்தமாக்குதல் போன்றவை ஏற்படும். அன்றாடம் குறைந்தது 8 மணி நேரம் கட்டாயமாக உறங்க வேண்டும்.
சரியாக தண்ணீர் குடிக்காதது:
உடலில் உள்ள உறுப்புகளுக்கு மிகவும் முக்கியமானது தண்ணீர். சரியான தண்ணீர் குடிக்காதபோது அது உடலை உலர்த்தி சருமத்தில் சுருக்கங்கள் உண்டாகும். அன்றாடம் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பது முக்கியம்.
முகப்பருவை உடைத்தல்:
முகப்பருவை உடைக்கும்போது அது சருமத்தில் தொற்றுகள் உண்டாகும். அப்படி கிள்ளும்போது அது பருக்களை அதிகரிக்கும். பருக்கள் அதிகமாக இருந்தால் சரியான மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.