‘மாஸ்டர்’ 2-வது சிங்கிள் டிராக் – அனிருத்தின் மசாலா குத்து

விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் ‘வாத்தி கம்மிங்’ தற்போது வெளியாகி வைராலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘ஒரு குட்டி கதை’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு இதன் இரண்டாவது சிங்கிள் டிராக்கான ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இப்பாடல் வழக்கம்போல் அவரது தர லோக்கல் ஸ்டைலில் உருவாகியுள்ளது. பாடல் வரிகள் இல்லாமல் சென்னையின் லோக்கல் பாஷைகளை கோர்வையாக்கி பாடலின் நடுவில் ஆங்காங்கே தூவி விட்டது போன்று உள்ளது. இசையும் அனிருத்தின் முந்தைய படங்களான, குறிப்பாக ‘பேட்டை’-யின் மரண மாஸ், ‘தர்பார்’ படத்தின் சும்மா கிழி பாடலின் இசைகளை மிக்ஸ் செய்தது போன்றே உள்ளது.

இன்னொரு வகையில் இந்த பாடலின் இசை யுவன் சங்கர் ராஜா இசையமைத்த ‘புதுப்பேட்டை’ படத்தின் வர்றீயா என்ற பாடலின் சாயலும் உள்ளது. பாடல் காட்சியமைப்பும் பாடல் உருவான விதமும் தர்பார் படத்தின் மரண மாஸ் பாடலையே நினைவுப்படுத்துகிறது.

முழுக்க முழுக்க விஜய்யின் ரசிகர்கள் குத்தாட்டம் போடுவதற்காக மட்டுமே இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. புதுமையாக சொல்லிக்கொள்ளும்படி எதுமே இல்லாத வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடம் எந்தளவில் வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

What do you think?

Yes Bank முறைகேடு – சிபிஐ வழக்குப் பதிவு

கேரளாவில் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா – தேர்வுகள் ரத்து