இந்தியாவில் 12-14 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று(மார்ச்.16) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம், அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
தமிழகத்திற்கு 21 லட்சத்து 60 ஆயிரம் டோஸ் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் தவணை தடுப்பூசி செலுத்தியபிறகு 28 நாட்களுக்கு பிறகு 2ஆவது தவனை தடுப்பூசி செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார்.அதன்படி,பள்ளிகளில் 12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.