வடபழனி முருகன் திருக்கல்யாணம் வைகாசி விசாகம்..
வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவ திருவிழா கடந்த மே 24ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று மாலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இத் திருக் கல்யாணத்தில் பிரசாதமாக மாங்கல்யம் கயிறு வழங்கப்பட்டது. இந்த கயிறை திருமணம் ஆன பெண்கள் கழுத்தில் அணிந்தால் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள்.
திருமணம் ஆகாத கன்னி பெண்கள் வாங்கி, வீட்டின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்தால். திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டும் வைகாசி விசாக பெருவிழா இன்று நடை பெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய விழாவாக தேரோட்டம் தொடங்கப்பட்டது. தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு தேரை வதம் பிடித்தனர். இதனை தொடர்ந்து இன்று இரவு 7மணிக்கு புஷ்ப பல்லாக்கு வீதிஉலா ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.