சூர்யா- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தின் கதை இதுவா?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இணையும் வாடி வாசல் படத்தின் கதை குறித்த தகவல் லீக்காகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து தனது 39வது படமாக ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் முன்னணி இயக்குனர் வெற்றி மாறனுடன் தனது 40வது படத்திற்காக கைகோர்க்கவுள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் இப்படத்திற்கு வாடிவாசல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இசையமைக்கிறார் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வாடிவாசல் படத்தின் கதை தற்போது லீக்காகியுள்ளது. இப்படம் “தனது தந்தையை பல ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டில் குத்திக்கொன்ற காளையை மகன் எப்படி தோற்கடிக்கிறான் என்பதே கதை” என்று சொல்லப்படுகிறது.

What do you think?

‘ கல்லை தூக்கி போட்டு இளைஞர் கொலை’ நிர்வாண கோலத்தில் கிடந்த உடலால் மதுரவாயிலில் பரபரப்பு!

திரௌபதி படத்தை பாராட்டிய தமிழக அமைச்சர்!