தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை, மக்கள் நல அரசு என்பதற்கு சான்று என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று (மார்ச்.18)காலை 10 மணியளவில் தொடங்குகியது. இதில், தமிழ்நாடு அரசின் 2022 – 23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திருக்குறளை மேற்கோள் காட்டி தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய நிதியமைச்சர், வரும் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 4.61% இருந்து 3.80% ஆக குறைய வாய்ப்புள்ளது. அந்த வகையில், ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது. மேலும்,வரும் நிதியாண்டில் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை, மக்கள் நல அரசு என்பதற்கு சான்று என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மக்கள் நல அரசு என்பதற்கு சான்று, ரூ.7,000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது என்பது பாராட்டுக்கு உரியது”, என குறிப்பிட்டுள்ளார்.