‘தமிழக விளை நிலங்களை கூறுபோடாதீர்கள்’ மத்திய அமைச்சரிடம் வைகோ கோரிக்கை!

தமிழக விளை நிலங்களை கூறுபோடாதீர்கள் என்று மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதானிடம் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், “தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் விளை நிலங்களில் பெட்ரோல் குழாய்கள் பதிக்கக்கூடாது எனவும் நெடுஞ்சாலை வழியே கொண்டு செல்ல வேண்டும் எனவும் மேலும் விவசாய விளை நிலங்கள் வழியே கொண்டு செல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றும் அதில் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த மனுவை மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேஷமூர்த்தியும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதானை சந்தித்து கொடுத்தனர்.

மேலும் இந்த மனுவில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பூர் சுப்பராயன் மற்றும் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏகே சின்னராஜூம் கையெழுத்திட்டுள்ளனர்.

What do you think?

‘என் கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான தருணம் இது தான்’ ரிக்கி பாண்டிங் வேதனை!

‘கொரோனா வைரஸுக்கு எதிராக உலக யுத்தம்’ இங்கிலாந்து இளவரசர் அறிவிப்பு!