தத்துவக் கவிஞர் குடியரசுவுக்கு வைகோ மலர்தூவி மரியாதை

தத்துவக் கவிஞர் குடியரசின் 18 வது ஆண்டு நினைவுநாளையொட்டி, சென்னை தாயகத்தில் அவரது உருவப்படத்துக்கு மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

எழும்பூரில் மதிமுக தலைமையகமான தாயகத்தில், கவிஞர் குடியரசுவின் 18 வது ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது, மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கவிஞர் குடியரசுவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது கவிஞர் குடியரசுவுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் அந்நிகழ்ச்சியில் பேசிய வைகோ, “வறுமையைத் தவிர வேறு எதையும் காணாத கவிஞர் குடியரசு, லட்சியத்தையும் கொள்கையையும் மட்டுமே நேசித்தார்” என புகழாரம் சூட்டினார். ஜப்பான் ஹைக்கூ கவிதைகள் போல் சவுக்கால் அடித்து சாட்டையால் விரட்டுவது போல், இரு சொற்களில் கவிதை எழுதும் ஆற்றல் படைத்தவர் அவர் என்றும் வைகோ கூறினார். கவிஞர் குடியரசு இருந்தபோது எந்த லட்சியங்கள் வெற்றிபெற வேண்டும் என நினைத்தாரோ, அந்த லட்சியங்களை வெற்றி பெறச்செய்ய அவரது நினைவு நாளில் அனைவரும் உறுதியேற்போம் எனவும் வைகோ சூளுரைத்தார்.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் டி.சி ராஜேந்திரன், சைதை சுப்பிரமணியன், கவிஞர் மணி வேந்தன், கவிஞர் குடியரசு மகன் இசைவாணன் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

தாமரையை டெல்லி மக்கள் துடைப்பத்தால் துடைத்தெறிந்துள்ளனர் – வைகோ விமர்சனம்!

சிலிண்டர் விலை உயர்வு!