வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த வைகோ..!!
வைகோ மருமகன் மதிமுகவில் இருந்து பாஜகவில் சேர்ந்தார் என்று தவறான தகவலை சிலர் வன்மம் கொண்டு பரப்புகின்றனர். கார்த்திகேயன் கோபால்சாமி என்பவர் யாரென்றே பலருக்கு தெரியாது.
அப்பா ஒரு கட்சி அம்மா ஒரு கட்சி அண்ணன் ஒரு கட்சி தம்பி ஒரு கட்சி என தற்போது நடைமுறையில் பார்க்கிறோம்.
வைகோ அவர்களது குடும்பம் அந்த சுற்றுவட்டாரத்தில் மிகப்பெரிய குடும்பம். அந்த வகையில் தூரத்து உறவினர் என்ற வகையில் பலர் இருப்பர்.
அதில் ஒருவரை வைகோ சகோதரி மகன் என்று கூறி கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி பரப்புரைக்கு வந்த போது இவரை இணைத்து வைகோ மருமகன் அதிமுகவில் சேர்ந்தார் என்று இதேபோல் செய்தி வெளியிட்டனர்.
அப்படி ஒரு ஆளு இருப்பதாக அப்பொழுது தான் பலருக்கு தெரிய வந்தது. அவருக்கும் வைகோ அவர்களது குடும்பத்திற்கும் எந்தவித நேரடி சம்பந்தமும் இல்லை. அவருக்கும் அரசியலுக்குமே சம்பந்தமே இல்லை என தெரிவித்திருந்தார்.
நிலைமை இப்படி இருக்க பிராடுகளின் மொத்த உருவமாக இருக்கும் சிலர் ஏதோ மதிமுகவில் இருந்து வைகோ அவர்களது சொந்த சகோதரி மகன் பாஜகவில் சேர்ந்துவிட்டதாக தவறான தகவலை பரப்புகின்றனர்.
நான்தான் வைகோ மருகன் என்று சொல்லி பெரிய செல்வாக்கான நபர் போல கூறி அந்த அப்பாவி பாஜகவினர் தலையில் மசாலா அரைத்து இருக்கிறார் அந்த நபர். அதுவும் தான் ஏற்கனவே அதிமுகவில் சேர்த்து விட்ட தகவலை மறைத்து.
அதிமுக வில் சேர்ந்த அன்று தான் இந்த நபரின் பெயரை பார்த்தேன். அதன்பிறகு இன்றுதான் பார்க்கிறேன். இந்தியாவை ஆளும் கட்சியின் நிர்வாகிகளின் திறன் கண்டு மெய்யாலுமே வியக்கிறேன்.
இது பற்றி பதிவு போட்டு இருக்கும் கோவில்பட்டி பாஜக நிர்வாகியின் அரசியல் வேறு லெவல் ஆக இருக்கும். காசு செலவழித்து தன்னை முன்னிலைப்படுத்துவது, தன்னை பற்றி எழுத வைப்பது இதை எல்லாம் தாண்டி முகநூலில் காசு கொடுத்து ஆப்ரிக்க நாடுகளில் இருந்து எல்லாம் வெளிநாட்டினர்.
பல்லாயிரக்கணக்கானோரை முகநூலில் பின்பற்ற வைத்து தான் ஒரு social media celebritie ஆக நினைத்து புளங்காகிதம் அடைந்து கொள்வார்.
அப்படி இருக்கும் நபரையும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையையும். இந்த கார்த்திகேயன் கோபால்சாமி நான் வைகோ மருமகன் என்ற சொல்லி ஏமாற்றியதில் எந்த வியப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..