February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் இந்தியா

ரயில்வேயில் 2 ஆம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்? வைகோவின் கேள்விக்கு, மத்திய அமைச்சர் விளக்கம்

பயணிகளுக்கான புதிய வசதிகளை மேம்படுத்துவதற்காகவே ரயில்வேயில் 2 ஆம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக, மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோவின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளார்.

மாநிலங்களவையில் உரையாற்றிய வைகோ, புத்தாண்டின்போது ரயில் கட்டணங்களை உயர்த்தியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். விவசாயிகள், கைத்தறி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் ரயில் பயணத்தின்போது அதிகளவில் 2-ஆம் வகுப்புகளை பயன்படுத்துவதால், அந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். மின் பயணச்சீட்டு எனப்படும் இ-டிக்கெட் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகள் காரணமாக, தொடர்வண்டித் துறைக்கு நாள்தோறும் 10 முதல் 15 கோடி ரூபாய் வரை இழப்புகள் ஏறப்படுகிறது. இதனைத் தடுக்கின்ற வகையில் ஐ.ஆர்.டி.சி இணையதளங்களில் தொழில்நுட்ப பாதுகாப்பு அதிகரிக்கப்படுமா என்றும் வினவினார்.

வைகோவின் இந்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய ரயில்வே துறை பயணிகளுக்கான வசதிகளை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருப்பதாக தெரிவித்தார். தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வு என்பது கடலில் ஒரு துளியைப் போன்றது என தெரிவித்த அமைச்சர் பியூஷ்கோயல், இந்த கட்டண உயர்வும் இல்லையென்றால் பயணிகளுக்கான புதிய வசதிகள் எதையும் செய்து தர முடியாமல் போய்விடும் என விளக்கமளித்தார்.

இ-டிக்கெட் முறைகேடுகளை தடுக்க தொழில்நுட்பங்களை மேம்படுத்திக்கொண்டே வருகிறோம் என அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். உலகம் முழுவதும் கணினி ஊடுருவல்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், ஒரு நெருப்பு வளையத்தை ஏற்படுத்தினால் அதற்கு எதிராக மற்றொரு வகையில் ஊடுருவல் நடைபெறுதாக கூறினார். இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பியூஷ் கோயல், வைகோவின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

Related posts

“கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானம்” – கமல் உருக்கம்

Digital Team

“நித்யானந்தாவின் ஆன்மீக ஆராய்ச்சிக்கு நான் ரெடி” – மீரா மிதுன் அதிரடி

Digital Team

இறுதிகட்ட படப்பிடிப்பில் தனுஷின் கர்ணன்

Digital Team

தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர்

Digital Team

GST வரி பைத்தியக்காரத்தனம்!; சுப்பிரமணியன் சுவாமியின் அடுத்த சிக்ஸர்

Digital Team

தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி ஏப்ரலில் தொடக்கம்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam