வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – வைகோ

சிப்பிப்பாறை பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 9 பேருக்கும் படுகாயம் அடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை கிராமத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் ராணி, ஜெயபாரதி, பத்ரகாளி, தாமரைச்செல்வி, தங்கம்மாள், வேலுத்தாய், காளியம்மாள், முருகையா உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு பெருந்துயர் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

படுகாயமடைந்த 9 பேரில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ள தகவல் மனதை வாட்டுவதாகவும் வைகோ கவலை தெரிவித்துள்ளார்.  அன்றாட கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தும் எளியவர்களின் இழப்பை அக்குடும்பங்களால் தாங்கிக்கொள்ள முடியாத பெரும் துயரம் எனக் கூறியுள்ள வைகோ, தமிழக அரசு விரைந்து செயல்பட்டு பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

சிகிச்சையில் இருக்கும் நபர்களுக்கு உரிய நிவாரண உதவி, தரமான சிகிச்சை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ள அவர், . லாப நோக்கில் அனுமதிக்கப்படாத பட்டாசுகளை உற்பத்தி செய்ததன் விளைவே விபத்துக்கு காரணம் என்ற தகவலின் உண்மை தன்மை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வைகோ விலியுறுத்தியுள்ளார்.

அதில், நிர்வாகத் தவறுகள் இருப்பின் தமிழக அரசு பாரபட்சமற்ற முறையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

What do you think?

விமானத்தில் வந்தவர்களுக்கு தனி முகாம்!

சமூக விரோதிகள் கைவரிசை காட்ட வாய்ப்பு! – ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை