இந்திய மீனவர்களை மீட்க ஈரானுக்கு வானூர்தி அனுப்புங்கள் – வைகோ

ஈரானில் சிக்கியுள்ள இந்திய மீனவர்களை மீட்க வானூர்தி அனுப்புங்கள் என அயல் உறவுத்துறை அமைச்சருக்கு, மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 900 இந்திய மீனவர்கள் ஈரான் நாட்டில் ஒதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவர்களுள், 700 பேர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஈரான் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு நேரடி வானூர்திகள் இல்லை என்பதால், அவர்களை மீட்கும் பணி தாமதம் அடைந்துள்ளது.

வளைகுடா நாடுகளின் வானூர்திகள் தொடர்பும் இல்லை. கொரோனா எனப்படும் கொவைட் 19 நோய்த்தொற்று, ஈரான் நாட்டிலும் பரவி இருப்பதால் அங்கே அன்றாட உணவுப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய மீனவர்களுக்கும் போதுமான உணவு கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் அச்சமும் பதற்றமும் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை உடனடியாக மீட்பதற்கு தனி வானூர்தி அல்லது கப்பல் அனுப்பிட வேண்டும். சீனாவின் வுஹான் மாநிலத்தில் சிக்கிய இந்தியர்களை மிக விரைவாக மீட்டுக் கொண்டு வருவதற்கு, நமது அயல் உறவுத்துறை மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்கு உரியவை. அதுபோல, ஈரானில் சிக்கியிருக்கின்ற இந்திய மீனவர்களையும் மீட்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன், என அந்த அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

What do you think?

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ – காதலும், ஹைடெக் திருடர்களும்!

இதுதான் என் வாழ்க்கை… என் முகம்..ஸ்ருதி ஹாசன் உருக்கம்!