Exclusive Today Trending அரசியல் இந்தியா தமிழ்நாடு

தாமரையை டெல்லி மக்கள் துடைப்பத்தால் துடைத்தெறிந்துள்ளனர் – வைகோ விமர்சனம்!

நீட் தேர்வைப்போல் ஹைட்ரோ கார்பன் விவகாரத்திலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்க நினைப்பதாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த போராட்டத்தில் பங்கேற்றது தொடர்பான வழக்கில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில், தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைக்கப் பார்ப்பதாக குற்றம்சாட்டினார். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியபோது, அதற்கு மத்திய அரசு விளக்கமளிக்கவில்லை எனக் கூறிய வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மக்களின் கருத்தை அறிய தேவையில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

காவரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது உண்மையென்றால், ஓ.என்.ஜி.சி, வேதாந்தா நிறுவனங்களுடன் 324 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை திரும்ப பெற மத்திய அரசு தயாரா என்றும் அவர் வினவினார். மத்திய அரசு, தமிழக அரசை ஏமாற்றப் பார்ப்பதாகவும் வைகோ குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய வைகோ, பா.ஜ.கவை மக்கள் கன்னத்தில் அறைந்ததுபோல், துடைப்பத்தாலும் துடைத்திருக்கிறார்கள் எனக் கூறினார். 7 பேரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளபோதும், தமிழக அரசும் ஆளுநரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை! – CAB

Digital Team

இலங்கை பிரதமர் ராஜபக்சேவிற்கு ரேணிகுண்டாவில் உற்சாக வரவேற்பு..!

Digital Team

தேமுதிகாவிற்கு ஒரு மாநிலங்களவை பதவி கிடைக்கும் – பிரேமலதா விஜயகாந்த் !

superadmin

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதி – கீழமை நீதிமன்றத்தில் பெறலாம்

Digital Team

அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது சிறுவன் கொடுத்த புகார் வாபஸ்!!!

Digital Team

“அனைவருக்காகவும் உழைப்பேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

Digital Team
You cannot copy content of this page
Madhimugam