வைகோவின் கோரிக்கைக்கு வெளியுறவு அமைச்சகம் பதில்

இந்திய மீனவர்களை காப்பாற்றக்கோரி மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுதிய கடிதத்திற்கு வெளியுறவு அமைச்சகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கே இருக்கின்ற இந்திய மீனவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை எனவும், அவர்கள் தாய்நாடு திரும்புவதற்கு, விமானம் அல்லது கப்பலை அனுப்புமாறு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, வைகோ வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை குறிப்பிட்டு, உணவு கிடைக்காமல் ஈரான் நாட்டில் சிக்கித்தவிக்கும் இந்திய மீனவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தாய்நாடு திரும்ப விருப்பம் உள்ளவர்கள் உடனே திரும்புவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், வெளியுறவுத்துறை அமைச்சகம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு விளக்கம் அளித்து கடிதம் எழுதி உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

What do you think?

டெல்லி கலவரத்தில் போலீசாரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் கைது!

‘பள்ளி சுவரின் மீது ஏறி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிட் பேப்பர்களை வழங்கிய அதிர்ச்சி சம்பவம்’