மாநிலங்களவையில் இருந்து வைகோ வெளிநடப்பு

ஹைட்ரோ கார்பன் விவகாரம் குறித்து பேச அனுமதி மறுத்ததால், மாநிலங்களவையில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளிநடப்பு செய்தார்.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் ஆகியவற்றை எதிர்த்து வைகோ தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதற்கான ஆய்வுக்கு மக்களிடம் கருத்து கேட்கவோ, சுற்றுச்சூழல் அனுமதியோ பெறத்தேவையில்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியிருந்தது. இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் பெட்ரோலியம் எடுக்கும் திட்டங்களை உடனே நிறுத்த வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்த்தை செயல்படுத்தக்கூடாது என வைகோ மற்றும் திமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் வலிறுத்தினர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் விளக்கம் கோர அனுமதிக்குமாறு வைகோ கோரினார். அப்போது, ஜவடேகர் அவையில் இருந்த நிலையிலும், பேரவைத் தலைவர் வைகோவை பேச அனுமதிக்கவில்லை. இதைக் கண்டித்து அவையில் இருந்து வைகோ வெளிநடப்பு செய்தார். இதேபோல் திமுக, கம்யூனிஸ்ட் எம்.பி-க்களும் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்

What do you think?

-1 points
Upvote Downvote

விளைபொருட்களுக்கு குறைந்த அளவு ஆதரவு விலை அறிவித்திருப்பதாக வைகோ கேள்வி

காக்னிசெண்ட் நிறுவனத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு!