மண்ணை விட்டுச்சென்ற தொண்டனால் கதறி அழுத வைகோ!

கட்சி நிர்வாகியின் அஞ்சலி கூட்டத்தில் ,மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்ணீர் விட்டு கதறி அழுதார்..

மதிமுக வேலூர் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரும், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான பன்னீர் என்பவர் உடல் நலம் குன்றியிருந்த நிலையில், நேற்று (பிப்-15) காலை காலமானார். இதனையடுத்து இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, கட்சியின் நிர்வாகிகள் பன்னீரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அனைத்து கட்சிகள் சார்ப்பாக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட வைகோ, மேடையிலேயே கண்ணீர் மல்க இருக்கமாக அமர்ந்திருந்தார். பின்பு கூட்டத்தில் பேசிய வைகோ, பன்னீரைப் பற்றி குறிப்பிடும் போது துக்கம் தாங்காமல் மேடையிலேயே கதறி அழுதார், இதனால் அங்கு இறுக்கமான சூழல் ஏற்பட்டது. இதனைக்கண்ட கட்சியினரும் அங்கிருந்த பொதுமக்களும் கண்ணீர் விட்டு அழுதனர். .

What do you think?

காஷ்மீர் குறித்து அமெரிக்கா கவலைப்பட வேண்டாம் – ஜெய்சங்கர்

ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி