கர்வம் தலைக்கேறிய வைரமுத்து..!! நான் என் வழியில் போய்கிட்டு இருக்கேன்..! தங்கர் பச்சன் பகீர் பதிவு..!
சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் இளையராஜா . இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000-ற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில், புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் எனும் திரைப்படத்தில் மூலம் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதினர். இவர் இதுவரை 5800 பாடல்களை எழுதியுள்ளார் எனபது பெருமைக்குரியது.
இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த பொன்மாலை பொழுது என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் கேட்டது. ஆனால் இவர்கள் கூட்டணி ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. மேலும் இளையராஜாவுடன் இணைந்து வழங்கிய பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்று தந்தது.
இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து கூறி வருதுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி‘ பட அறிமுக டீசரில் தனது பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து இளையராஜாவைச் சுற்றி சர்ச்சைகள் தொடங்கியது. வைரமுத்து பேசியது தான் சர்சசைக்கு காரணம் என பலரும் கூறி வருகின்றனர்.
திரைப்பட இசை வெளியிட்டு விழா ஒன்றில் பேசிய கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து, “இசையும் பாடல் வரிகளும் இணைந்தால் நல்ல பாடல் உருவாகும். சில சமயங்களில் இசையை விட மொழி சிறந்ததாகத் திகழும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப் புரிந்துகொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” என்று பேசியிருந்தார். இது இளையராஜாவை மறைமுகமாக விமர்சிக்கிறார். என்று கேள்விகள் எழுந்து வருகிறது.
அந்த வகையில் கங்கையமரன் வெளியிட்ட வீடியோ திரைத்துறையில் காட்டு தீயாக பரவி வருகிறது.
இளையராஜாவின் சகோதரான கங்கை அமரன் வைரமுத்துவை கடுமையாக சாடியுள்ளார். “வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறி விட்டது” எனவும் மனுஷனுக்கு எப்போதுமே நன்றி வேணும். வைரமுத்து அவர்களை வாழவைத்த இளையராஜாவை, ஃபோட்டோ வைத்து அவர் கும்பிட வேண்டும்.
இனிமேல் வைரமுத்து அவர்களே.., இளையராஜா குறித்து நீங்கள் குற்றங்களோ குறைகளோ சொல்லுவதாக இருந்தால், அதன் விளைவுகளை நீங்கள் வேறமாதிரி சந்திக்க நேரிடும்” என்று கூறியுள்ளார். மேலும் இளையராஜா இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், என்னை பற்றி ஏதாவது ஒரு வகையில் தினமும் இது போன்ற வீடியோக்கள் வந்து கொண்டு இருக்கிறது. என்று எனக்கு வேண்டியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) May 16, 2024
நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை. நான் என் வழியில் ரொம்ப க்ளீனா சுத்தமா போய்கிட்டு இருக்கேன். நீங்கள் என்னை வாழ்த்தி கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில், ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன். என்ற சந்தோஷமான செய்தியை நான் உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து இளையராஜா வெளியிட்ட கருத்து தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி உள்ளது. அதையடுத்து இளையராஜாவை ராஜ்யசபா எம்பி ஆக்கப் போவதாகவும் பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இயக்குனர் தங்கர்பச்சன் இதுபற்றி ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், ‛‛இளையராஜா கூறிய கருத்து மட்டும் தான் இப்பொழுது தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான சிக்கலா..? கேள்வி எழுப்பவும் போராடவும் வாதங்கள் புரிவதற்கும் வேறு எதுவுமே இங்கே இல்லையா..?
மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இதே போன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, தொடர் மின்வெட்டு, விவசாயிகளின் தீராத சிக்கல்கள், வரி உயர்வு, நீட் போன்ற தீராத முதன்மை சிக்கல்கள் குறித்து இதேபோல் இரவும் பகலும் பேசி தீர்வு காண்பீர்களா..? என தங்கர்பச்சன் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
– பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..