திருமண வரன் தரும் வாமனபுரீஸ்வரர்..!
தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி… என்று எந்நாளும் ஈசனை என சொல்லுவது சிவபெருமானின் பக்தர்களின் இயல்பு, ஈசன் அருளாட்சி புரிந்த தலம் தான் “திருமாணிக்குழி“. மகாபலியின் தலைமீது கால்வைத்து அவனை பூமியோடு அழுத்தி அழித்த வாமனப் பெருமாள் பூஜித்த தலம் இத்திதிருத்தலம்.
விநாயகர் முதல் சண்டேஸ்வரர் வரை அனைவருக்கும் ஆதித்ய விமானம் அமைந்த ஒரே கோயில் இது மட்டுமே, திருமால் வாமன அவதாரத்தில் இவரை வழிபாடு செய்த போது இறைவன் தன்னுடைய ருத்ர கணங்களில் பீமசங்கரன் என்பவரை, பூஜையை காவல் காக்கும் தெய்வமாக நியமித்தார். எனவே அவருக்கு வழிபாடுகள் செய்த பின்னரே இறைவனை தரிசனம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று வழிபடுவதும் காசிக்கு சென்று 16 முறை செல்வதற்கும், திருவண்ணாமலையை 8 முறை சுற்றி வழிபடுவதற்கும், சிதம்பரத்தை 3 முறை வழிபடுவதற்கும் சமம், என பல ஆன்மீக வரலாற்றில் சொல்லியிருக்கின்றனர்.
இத்திருத்தலத்திற்கு ஒருமுறை சென்று வழிபட்டால் கேட்ட வரன் கிடைக்கும் என்பது ஐதீகம், முக்கியமாக திருமண வரன்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..