திருப்பூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து..! உடைந்த ஆஞ்சநேயர் சிலை..!!
திருப்பூர் அருகே ஆஞ்சனேயர் சிலை கொண்டு சென்ற வேன் விபத்தில் சிக்கியது .
புதுக்கோட்டையில் உள்ள மருத்துவக் கல்லூரி முன்பாக கோவில் அமைக்க அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இணைந்து பலரிடமும் நன்கொடை பெற்று கோவில் பணிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவில் முன்பாக ஆஞ்சநேயர் சிலை அமைப்பதற்கு திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள சிற்பக் கலைக்கூடத்தில் சிலை வடிக்கப்பட்டு இன்று காலை ஆஞ்சநேயர் சிலையை கொண்டு செல்ல வேன் ஒன்றில் ஏற்பாடு செய்தனர்.
புதுக்கோட்டையில் இருந்து எட்டு பேர் காரில் வந்த நிலையில் 7 அடி உயர ஆஞ்சநேயர் சிலை வேன் மூலமாக கொண்டு செல்லப்பட்டது. நான்கு பேர் காரிலும் மீதமிருந்த நான்கு பேர் வேனில் ஏறி புறப்பட்டனர். காங்கேயம் சாலை நாச்சிபாளையம் அருகே வேன் சென்ற போது அதிக பாரம் காரணமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணம் செய்த 4 பேர் படுகாயத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆஞ்சநேயர் சிலையும் உடைத்து சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த அவிநாசி பாளையம் போலீசார் ஜேசிபி உதவியுடன் கவிழ்ந்த வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர். புதிதாக கோவில் அமைக்க கொண்டு செல்லப்பட்ட ஆஞ்சநேயர் சிலை பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உடைந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..