வானதி ஸ்ரீனிவாசன் வைத்த கோரிக்கை., சட்டென முடிவெடுத்த ஸ்டாலின்..!! அப்போ அதிமுக நொறுங்கிடுச்சா..?
கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாளில் நடைபெற்ற நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜகவினர் பங்கேற்றனர். அதில் திமுக பாஜகவினர் நெருக்கமாக இருந்தது உள்ளிட்ட பல விஷயங்கள் கவனத்தை பெற்றுது. அந்த நெருக்கத்திற்கு பின் பல முக்கியமான காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது..
கருணாநிதி நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதில் கலந்து கொண்டார். அதில் பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பல்வேறு பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்..
அதில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கருணாநிதியை மிகச் சிறந்த நிர்வாகி என அழைத்த ராஜ்நாத் சிங், அவர் மாநில அரசியல்வாதி இல்லை என்றும் தேசிய தலைவர் எனவும் புகழாரம் சூட்டினார். பாஜக தலைவர் அண்ணாமலை முன் வரிசையில் அமர வைக்கப்பட்டார். இதனால் பாஜக – திமுக நிர்வாகிகள் மிக நெருக்கமாகமானவர்களாக காணப்பட்டார்கள்.
பாஜக அப்படி திமுகவுடன் மிக நெருக்கமாக இருக்க வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும் வருகின்ற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு திமுகவின் தயவை பாஜக எதிர்பார்கிறதோ என்ற கேள்வி எழுந்தது.
கலைஞர் நூற்றாண்டு நினைவுநாளில் நடந்தது :
இந்நிலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சந்தித்தது பல விவாதங்களை முன்வைத்து பேசியுள்ளார்.. அதாவது வானதி சீனிவாசன் முதலமைச்சரை ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று நேரம் ஒதுக்கீடு செய்துள்ளார். தண்ணி சந்திக்க வந்த வானதியை வரவேற்று நலம் விசாரித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதையடுத்து அவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். வானதி சீனிவாசன் அதையடுத்து கோவை விமான நிலையத்திற்குள் நிலம் ஒதுக்குவது பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளார்.
அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், கண்டிப்பாக நிலம் ஒதுக்கீடு பற்றிய அறிவிப்புகள் வரும் என பதில் அளித்துள்ளார். அதன்படியே நேற்று மாலையே கோவை விமான நிலையத்திற்கான நிலம் 99 ஆண்டுகளுக்கு விமான துறைக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
வானதி சீனிவாசன் நேற்று அளித்த பேட்டியில் திமுக பாஜக கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. நாங்கள் ஆக்கபூர்வமான் எதிர்க்கட்சியாக தான் செயல்பட்டு வருகிறோம். அதிமுக இதை ஒரு பெரிய பேச்சாக மாற்றி சர்ச்சையை கிளப்பி கொண்டு வருகிறது. முன்பெல்லாம் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் கூட மாறி மாறி எதிர்க்கட்சி தலைவர்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை வைப்பது வழக்கம்.
ஜெயலலிதா ஆட்சியில் கூட ஸ்டாலின் சென்று அவரை சந்தித்து கோரிக்கைகளை வைத்து உள்ளார். ஆனால் அதிமுக தற்போது இதுபோன்ற சந்திப்புகளை மேற்கொள்வது இல்லை. முதல்வர் ஸ்டாலினிடம் இதற்கான கோரிக்கைகளை வைப்பது இல்லை. இதை குறிப்பிடும் விதமாகவே வானதி சீனிவாசனும்.,. நாங்கள்தான எதிர்க்கட்சி.. நாங்களே ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை பாஜக எப்படி செயல்பட்டதோ இனியும் அப்படி தான்.., ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் எண்ணம் தற்போது பாஜகவிற்கு இல்லை. அதிமுகவே அங்கு நொறுங்கி கிடக்கும் போது பாஜக எதை நம்பி அவர்களை சேர்த்துக்கொள்ளும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..