திருச்சி மாவட்டத்தில் பாப்பாக்குறிச்சி அரசு பள்ளியில் ’வானவில் மன்றம்’ என்ற திட்டத்தை நேரில் சென்று தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின். பின்னர் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் உரையாடினார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ’வானவில் மன்றம்’ திட்டத்தை திருச்சி அரசு பள்ளியில் தொடங்கி வைத்தார். 25 கோடி செலவில் ’வானவில் மன்றம்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் செயல்திறன்களையும், அறிவியல் ஆற்றலையும் ஊக்குவிக்க உதவும் என்றும் தெரிவித்துள்ளனர்
பின்னர் அப்பள்ளியிலுள்ள வகுப்பறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்கள் முதல்வரிடம் சில அறிவியல் செயற்முறைகளை செய்து காட்டி முதல்வரிடம் பாராட்டு பெற்றனர் .இந்த நிகழ்வில் தமிழ்நாடு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷும் கலந்து கொண்டார்.