வண்டலூர் உயிரியல் பூங்கா டிக்கெட் விலை உயர்வு..!! சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி..!!
சென்னை தாம்பரம் பகுதியில் அமைந்திருக்கும் சுற்றுலா தளங்களில் ஒன்றான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது, பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் இந்த சுற்றுலா தளத்திற்கு பயணிகள் வந்து செல்வது வழக்கமான ஒன்று. மற்ற நாட்களில் சுற்றுலா பயணிகள் வரும் கூட்டத்தை விட விடுமுறை நாட்களில் இன்னும் அதிகமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
வண்டலூர் பூங்கா :
வண்டலூர் பூங்காவில் வெள்ளை புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை, காட்டுநாய், முதலை உட்பட 2000 மேற்பட்ட பறவைகள், விலங்குகள் மற்றும் மீன்கள் உள்ளன. விலங்குகள் மற்றும் பறவைகள் மட்டுமின்றி சிறுவர் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா மற்றும் பாம்பு பண்ணை என பலவும் மக்களை ரசிக்க மற்றும் வியக்க வைக்கும் வகையில் வண்டலூர் உயிரியல் பூங்கா இருக்கிறது.
தற்போது கோடை விடுமுறை என்பதால் வண்டலூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவின் சிறந்த பூங்கா “வண்டலூர் உயிரியல் பூங்கா” என்ற விருதை வண்டலூர் உயிரியல் பூங்கா பெற்றுள்ளது.
என்ட்ரி டிக்கெட் :
இதற்கு முன் பூங்காவை சுற்றி பார்க்க 90 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது நுழைவு கட்டணத்தின் விலை 200 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த 200 ரூபாய் கட்டணம் இந்தியர்களுக்கு மட்டும் தான்.., வெளிநாட்டில் இருந்து வரும் பயணர்களுக்கு இதை விட அதிகமாக உயர்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வுகள் இன்னும் ஒரு வாரத்திற்கும் அமலுக்கு வந்துவிடும். மேலும் மற்ற சேவை கட்டணங்களும் விரைவில் உயர்த்தப்படும் எனவும் வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டண உயர்வு காரணம் :
விலங்குகள் பராமரிப்பு மற்றும் ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றிற்கு வருடத்திற்கு 13 கோடி ரூபாய் வரை செலவாகிறது. ஒரு சில சமையம் விலங்குகளின் பராமரிப்பிற்கான செலவு அதை விட அதிகமாக இருப்பதால். இந்த கட்டணம் உயர்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
2020ம் ஆண்டில் இருந்து 2023 வரை பெரியவர்களுக்கான நுழைவு கட்டணம் 90 ரூபாய் இருந்த நிலையில் தற்போது 200 ரூபாய் அதிகரிக்கப்போவது சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.