நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்…!! மீண்டும் ஒரு அலசல்..!!
ராணிப்பேட்டை மாவட்டம் :
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் 25 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் :
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோவில் தெருவில் 17 லட்சத்து 44 ஆயிரத்து 800 ரூபாய்மதிப்பீட்டிலான நலத்திட்டப்பணிகளை ஊராட்சிமன்ற தலைவர் சதா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சிபிரதிநிதிகள், கிராம நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் :
உத்திரபிரதேசம் மற்றும் சண்டிகர் மாநிலங்களில் மின்சார வாரியங்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை கைவிட வலியுறுத்தி மயிலாடுதுறை மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழ்நாடு மின்சார வாரிய பெடரேஷன் திட்ட தலைவர் தனசேகரன் தலைமையிலான திரளான பணியாட்கள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் :
ராணிப்பேட்டை சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு யோகா லட்சுமி நரசிம்மர், அமிர்த்தவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பிரம்மதீர்த்தம் என்னும் தக்கான் குளக்கரையில் அமைந்துள்ள 32 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் லட்சம் கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் :
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் மேலையூரில் பழமை வாய்ந்த அந்தோனியார் ஆலயத்தில் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி பக்தர்கள் வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை செய்யப்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..