நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!!
ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது எனவும், இதனால் வாகன நெரிசல் ஏர்பட்டு பணிக்கு செல்வோர் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் அவதிக்குள்ளாவதால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் இணைய வழியில் முன்பதிவு செய்யலாம் என ஜல்லிக்கட்டு பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
தரங்கம்பாடி அருகே அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி உயிரிழந்த நிலையில், இரண்டு கால்கள் எலும்புமுறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த மாணவரும் உயிரிழந்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பால் 20ஆயிரம் ஹெக்டேர் விலை நிலங்களுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் அருகே விவசாயி விநாயகமூர்த்தி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதற்கு மின்வாரியத் துறையினரின் அலட்ஷியமே காரணம் என்று விநாயகமூர்த்தி உறவினர்கள் குற்றம் சாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வீரியம்பட்டி கூட்ரோடு பகுதியில் 20 அடி பள்ளத்தில் சிக்கி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.
வேலூர் மாவட்டம் சாய்நாதபுரத்தில் சிவனடியார்கள் திருவாசக முற்றோதல் குழுமம் சார்பில் பண்ணிரு திருமுறை மாநாடு கலவை சச்சிதானந்த சுவாமிகள் தலைமையில் நடைப்பெற்றது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..