நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக…!!
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் சார்பில் கால்பந்து, கோலம்போட்டி உள்ளிட்ட பண்முக கலாச்சார போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றிப்பெற்ற நபர்களுக்கு 19,500 ரூபாய் மதிப்பிலான பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, வழங்கினார்.
எடப்பாடி அருகே வெள்ளாண்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் அருள் முருகன் மகன் திலகர் கடும் காய்ச்சல் பாதிப்பால் கடந்த 14ம் தேதி எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்தபோது குழந்தையின் தொண்டைக் குழியில் 5 ரூபாய் நாணயம் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து மருத்துவர் கோகுலகிருஷ்ணன், மற்றும் மருத்துவர் தினேஷ்குமார், அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இயங்கி வரும் தமிழ்நாடு கிராம வங்கியின் பின்புறத்தில் மர்ம நபர்கள் சிலர் துளையிட்டு வங்கி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது வங்கியின் அலாரம் ஒளிக்கப்பட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், நகர குற்றப்பிரிவு காவல்துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வங்கியில் ஏற்கனவே இரண்டு முறை கொள்ளை முயற்சி நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கடை வீதியில் 13 நபர்களுக்குச் சொந்தமான கடைகளை தவறான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த தனி நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அந்த பத்திரப்பதிவு ரத்து செய்ய வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட வணிகர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் வருகின்ற 19ஆம் தேதி கடையடைப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஆரூர் கிராமத்தை சேர்ந்த புருசோத்தம்மன், சென்னையில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாப்பேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் புருசோத்தம்மன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆற்காடு தாலுக்கா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார். அதன் பின்னர் ஊட்டசத்து குறைபாடுகளிலிருந்து பாதுகாத்துகொள்ள திரவ சொட்டு மருந்தை அளிக்குமாறு ஊழியர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் தொடங்கி வைத்தார். இதில் அரசு அலுவலர்கள், வட்டார போக்குவரத்துத் துறையினர் மற்றும் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..