நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!!
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பெத்திசெட்டிபுரம், அறிவொளி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்து தகவலறிந்ததும் மாநகராட்சி ஊழியர்கள் கொங்கு மெயின் ரோடு பகுதியில் தேங்கி உள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு, மேல்நிலைக் கல்வியில் கலந்தாய்வு முதுநிலை ஆசிரியர், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி தூய மரியன்னை கல்லூரி வளாக முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் பாரதியார் படிப்பக நூலகம் சீரடைந்து கிடைப்பதால், அப்பகுதி மக்கள் சிலர் குப்பை கூடமாக பயன்படுத்துவதாகவும், சிலர் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்படுத்தும் சமூக விரோதிகளின்கூடாரமா மாறிவருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் நூலகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி, மதுரா கிரமத்தில் 9 -ம் ஆண்டு காளை விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடியது. இதில் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய 61 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருப்பூர் மாநகர் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது. இந்த விபத்து குறித்து அனுப்பர்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.