நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!!
சென்னை செம்மஞ்சேரி போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆட்டோ பேரணியை செம்மஞ்சேரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் கருணாநிதி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் 150க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் 2ஆயிரத்திற்கு மேற்பட்ட செவ்வாழை மரங்கள் மற்றும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்ததில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள கல்குவாரியில், வெடிகள் வைத்து கற்கள் வெட்டிஎடுப்பதால், அப்பகுதியில் உள்ள வீடுகள் சேதமடைவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டாட்சியர் ராஜமாணிக்கம், கற்களை ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான மாடு மற்றும் கன்றுகுட்டிகளை சிறுத்தை தாக்கியதில் அவை உயிர் இழந்துள்ளன. இதுகுறித்து வடக்கிபாளையம் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சிறுத்தைகள் நடமாட்டத்தை கண்காணிக்க 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயங்களுடன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வாலாஜாப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.