நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள் உங்கள் பார்வைக்காக…!!
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சக்தி திரையரங்கில் விடாமுயற்சி படம் திரையிடப்பட்டது. முன்னதாக அஜித்தின் ரசிகர்கள் அவரது கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் பூசணிக்காய் தேங்காய் சுற்றியும் பட்டாசுகள் வெடித்தும் கோலாகலமாக கொண்டாடினர். இந்த திரையரங்கில் நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தை வாழ்த்தி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கட்டவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அக்சிலியம் மகளிர் கல்லூரியில் வேதியியல் பொருட்களின் பயன்பாடு குறித்த ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிலி நாட்டை சேர்ந்த பேராசிரியர் முனைவர் புகழேந்திரன், ஆராய்ச்சி மைய பேராசிரியர் சுதாகர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்று கருவிகளை உருவாக்குவது குறித்தும், மருந்துகளை தயாரிக்க மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகள் பரிசோதனைகளுக்கு பயன்படுத்தபடுவது குறித்தும் மாணவர்களுக்கு உரையாற்றினார்.
திருப்பத்தூர் மாவட்டம் பாரத் ஸ்டேட் பேங்க் முன்பு மத்திய தொழிற்சங்ககள் கூட்டமைப்பு சார்பில் தொழிற்சங்ககள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றதால், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ் வேணுகோபால் கேசவன் தேவராஜ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரோடு பெரியசாமி, ஹரிகிருஷ்ணன் என்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 21 பேர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சாமியார்மலை பகுதியில் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான ஆட்டை சிறுத்தை இழுத்து காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளது. மேலும் 3 ஆட்டுக்குட்டிகள், வான்கோழி மற்றும் நாய் உள்ளிட்டவற்றையும் கடித்து கொன்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் இப்பகுதியில் மட்டும் சிறுத்தையினால் ஒரு இளம் பெண் உட்பட பத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் உயிர் இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி கடந்த 5 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஸ்க்ரப் டைப்ஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதனை அடுத்து சுகாதாரத்துறையினர் சுப்பிரமணி வீட்டைச் சுற்றி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் கிராமம் முழுவதும் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மாணவர்கள் உயிர் இழந்த நிலையில் சூர்யா லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..