தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது..
மயிலாடுதுறையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், மாநில செயலர்கள் பார்த்திபன், அண்ணாகுபேரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர்.
இந்த மாநாட்டில், அரசு ஊழியர்களுக்கு சரண் விடுப்புத்தொகை வழங்க வேண்டும், வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சென்னையில் டிசம்பர் 22, 23-ம் தேதிகளில் நடைபெற உள்ள வைரவிழா மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து திரளானோர் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.